விருதுநகர்: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

19 hours ago 2

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மிதலைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி முனீஸ்வரி (வயது 32). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்த 2½ பவுன் நகையை திருப்பி கொண்டு தனது கைப்பையில் வைத்து இருந்தார். பின்னர் அவர் புதிய பஸ் நிலையம் சென்று பஸ்சில் ஏறி ஊருக்கு சென்றார்.

வீட்டிற்கு வந்து பார்த்த போது நகை காணாமல் போனதை கண்டு முனீஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article