அமெரிக்காவின் சமரச முயற்சியை மத்திய அரசு ஏற்கிறதா..? - காங்கிரஸ் கேள்வி

2 days ago 3

புதுடெல்லி,

காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் பைலட் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "இந்தியா-பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்தம் செய்யப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதலில் அறிவித்துள்ளார். இது, இதுவரை நடந்திராத செயல். பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சினையை சர்வதேச பிரச்சினை ஆக்க முயற்சி நடப்பதாக தோன்றுகிறது.

காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். காஷ்மீர், இருதரப்பு பிரச்சினை. அதில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை மத்திய அரசு ஏற்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தற்போதைய சூழலில் இத்தகைய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தையும், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரையும் கூட்ட வேண்டும்" என்று கூறினார்.

Read Entire Article