புதுடெல்லி,
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்தது. இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி63 பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார் . பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்று மாரியப்பன் சாதனை படைத்துள்ளார். 2016-ல் தங்கமும், டோக்கியோ 2020-ல் வெள்ளியும், பாரீஸ் 2024-ல் வெண்கலமும் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில், மாரியப்பன் தங்கவேலு இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியை சந்தித்த்துள்ளார். அப்போது பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு விராட் கோலி வாழ்த்து கூறியுள்ளார் . இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.