ஐ.பி.எல். வரலாற்றில் 3-வது அதிவேக சதம்.. யூசுப் பதானை சமன் செய்த கிளாசென்

2 hours ago 2

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 68-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டெல்லியில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிளாசென் 105 ரன்கள் குவித்தார். கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதில் கிளாசென் வெறும் 37 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த யூசுப் பதானை சமன் செய்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. கிறிஸ் கெயில் - 30 பந்துகள்

2. வைபப் சூர்யவன்ஷி - 35 பந்துகள்

3. யூசுப் பதான்/கிளாசென் - 37 பந்துகள்

4. டேவிட் மில்லர் - 38 பந்துகள்

இதையடுத்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது.


Read Entire Article