விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்கிறாரா சிம்பு?

12 hours ago 4

சென்னை,

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சமீபத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சிம்பு நடிப்பில் வெளியான 'பத்து தல' படத்தில் இடம்பெற்ற "நீ சிங்கம் தான்" என்ற பாடலை கூறியிருந்தார்.

இதனை பார்த்த நடிகர் சிம்பு அதனை தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து விராட் கோலியை டேக் செய்து நீ சிங்கம் தான்.. என்று நெகிழ்ந்து பதிவிட்டார்.

இது இரு நட்சத்திரங்களின் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியது. இந்நிலையில், விராட் கோலியின் பயோபிக்கில் சிம்பு நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் வெளியாகவில்லை என்றாலும் இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Read Entire Article