
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
2026 குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல், மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். திமுகவிற்கு கொள்கையும் கிடையாது. ஊழல் செய்த பணத்தை என்ன செய்வது என தெரியாமல் உள்ள கட்சிதான் திமுக. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என்றால் திமுக, ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சி திமுக.
மக்களை சந்திக்ககூடிய அளவுக்கு என்ன திட்டம் கொண்டு வந்துள்ளீர்கள். அதிமுக அட்சியில் திட்டங்கள் ஊர்ந்து போனதாக முதல் அமைச்சர் கூறுகிறார். சொத்து வரி, குடிநீர் வரி என அனைத்தையும் திமுக உயர்த்தியுள்ளது" என்றார்.
மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தொடர்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி, இது என்னுடைய கட்சி உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. இரு கட்சிகளும் மகிழ்ச்சியோடு அமைத்த கூட்டணி. எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயம். வருமான வரித்துறை அமலாக்கத்துறையை பார்த்து திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. 4 ஆண்டு காலத்தில் கொள்ளையடித்ததை மறைத்ததால் அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு பயப்படுகிறீர்கள்" என்று விமர்சித்தார்.