
மலையாள சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் 'அசுரன், துணிவு, விடுதலை 2, வேட்டையன்' போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் ஆர்யா, கவுதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகி வரும் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர் சமீபத்தில் ஷாப்பிங் மால் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். அப்போது நடிகை மஞ்சு வாரியர் தன் காரில் நின்றபடி ரசிகர்களை பார்த்து கையசைத்து கொண்டிருந்தார்.
அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ரசிகர்கள் முண்டியடித்தனர். அந்த கூட்டத்தில் இளைஞர் ஒருவர் மஞ்சுவாரியரின் இடுப்பில் கை வைத்து அழுத்தி விட்டார். இதனால் அவர் செய்வதறியாமல் திகைத்து நின்றார். இதையடுத்து பதற்றத்துடன் நடிகை திரும்பி பார்த்த போது அந்த மர்ம நபர் அந்த இடத்தில் இல்லை. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.