விராட் கோலி எதிரணியில் இருந்தால்.... - ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி

1 month ago 8

சென்னை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21-ல் சென்னையும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. நடப்பு தொடரில் இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளன. அந்த வெற்றிப்பயணத்தை தொடர இரு அணிகளும் விரும்பும்.

இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில், இந்த போட்டி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நடுக்காகவும், பெங்களூரு அணிக்காகவும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி எதிரணில் இருந்தால் அந்தப்போட்டி ரசிகர்களால் எப்போதும் எதிர்பார்க்கப்படும் ஒரு மோதலாகவே இருக்கும்.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் ஏதோ தனித்துவம் இருக்கிறது. ஆர்.சி.பி. அணி வலுவாக இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை போலவே இந்த போட்டியிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ரசிகர்கள் தவிர்க்கக்கூடாத போட்டியாக இருக்கும்.

ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணியை எதிர்கொள்ள நானும் ஆவலாக உள்ளேன். ரஜத் படிதாரும், நானும் நீண்ட காலம் நண்பர்களாக உள்ளோம். ஒருவரையொருவர் நன்கு அறிந்து வைத்துள்ளோம். ஆர்.சி.பி எப்போது ஒரு வலுவாக அணியாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article