வியட்நாம் பெண்ணுடன் நெல்லை வாலிபர் டும்..டும்..

1 week ago 4

நெல்லை: நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மகேஷ். இவர் பிபிஏ படித்து முடித்து விட்டு வியட்நாமில் உள்ள தனியார் நிறுவனத்தில் குளோபல் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவருடன் வியட்நாமைச் சேர்ந்த சேர்ந்த இளம்பெண் நுகின் லீ தய் என்பவர் மனித வள மேம்பாட்டு மேலாளராக வேலை செய்து வருகிறார். ஒரே அலுவலகத்தில் வேலை செய்ததால், அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு,காதலாக மாறியது. கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதுகுறித்து அவர்கள் இரு வீட்டார்களிடம் தெரிவித்து சம்மதம் பெற்றனர்.

இதையடுத்து, நெல்லை, டவுனில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலில் மகேசுக்கும், நுகின் லீ தய்க்கும் தமிழ் முறைப்படி நேற்று திருமணம் நடந்தது. நுகின் லி தய் கூறுகையில், ‘தமிழ் முறைப்படி நான் புதிதாக புடவை கட்டி உள்ளேன். இந்த மரபு எனக்கு பிடித்திருக்கிறது’ என்று கூறினார்.

The post வியட்நாம் பெண்ணுடன் நெல்லை வாலிபர் டும்..டும்.. appeared first on Dinakaran.

Read Entire Article