"இதேபோல வேறு யாராவது பேசியிருந்தால் இந்நேரம்.." - பொன்முடி வழக்கில் ஐகோர்ட் கண்டிப்பு

1 day ago 3

சைவம் - வைணவம் தொடர்பான அமைச்சர் பொன்முடியின் அவதூறு பேச்சு துரதிர்ஷ்டவசமானது, சகித்துக்கொள்ள முடியாதது என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இதற்காக பொன்முடி மீது எஃப்ஐஆர் பதிவு செய்து வரும் 23-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக கடந்த 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

Read Entire Article