
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் உடன் மோதினா.
இந்த போட்டியின் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் டெய்லர் பிரிட்ஸ் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2வது செட்டில் டெய்லர் பிரிட்ஸ் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது ஜோர்டான் தாம்சன் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
இதையடுத்து டெய்லர் பிரிட்ஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ் ரஷியாவின் கரேன் கச்சனோவை எதிர்கொள்கிறார்.