விம்பிள்டன் டென்னிஸ்: அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

5 hours ago 1

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டிவிட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில், இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை அல்காரஸ் கைப்பற்றிய நிலையில் 2-வது செட்டை டெய்லர் பிரிட்ஸ் கைப்பற்றி அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து நடைபெற்ற 3 மற்றும் 4-வது செட்டுகளை அல்காரஸ் கைப்பற்றி வெற்றி பெற்றார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 6-4, 5-7, 6-3 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Read Entire Article