
லக்னோ,
உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் சதார் கோட்வாலி கிராமத்தை சேர்ந்த 45 வயது நபருக்கு திருமணமாகி 16 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு மகளை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தையை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் குறித்த விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.