விமானப்படை எழுத்தர் பணிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் - இளைஞர் கைது..

2 months ago 12
சென்னை ஆவடி இந்திய விமானப்படை தளத்தில் நடைபெற்ற கிளார்க் பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ஹரியானா மாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.  தேர்வுக்கு வருகை தந்தவர்களில் டெல்லி ஆக்ராவைச் சேர்ந்த மகேந்திர பிரதாப் என்பவர் பெயரிலான ஹால் டிக்கெட்டில் இருந்த புகைப்படத்துக்கும் தேர்வு எழுத வந்திருந்தவருக்கும் முக வேறுபாடு காணப்பட்டதையடுத்து விசாரணை நடைபெற்றது. அதில், மகேந்திர பிரதாப்புக்குப் பதிலாக தேர்வு எழுத வந்திருந்தவர் பெயர் சுசில் என்பதும் ஹரியானாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்காக மகேந்திர பிரதாப்பிடம் சுசில், 3 லட்சம் ரூபாய் பணம் பெற்றிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 
Read Entire Article