நீரஜ் சோப்ராவுக்கு துணை ராணுவத்தில் கௌரவப் பதவி வழங்கியது ஒன்றிய அரசு

4 hours ago 2

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. துணை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் பதவி அளித்து நீரஜ் சோப்ராவுக்கு ஒன்றிய அரசு கவுரவம் வழங்கியது. இந்த நியமனம் ஏப்ரல் 16 முதல் அமலுக்கு வந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

நீரஜ் சோப்ரா 2016 இல் இந்திய ராணுவத்தில் நைப் சுபேதார் என்ற பதவியதுடன் ஜூனியர் கமிஷன்டு அதிகாரியாக (JCO) சேர்ந்தார். ஈட்டி எறிதல் விளையாட்டில் தனது திறமையால் இந்தியாவிற்கு சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்டு வந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்துடன் அவர் வரலாறு படைத்தார்.

2024 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்திற்குப் பிறகு, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பல முறை பதக்கம் வென்ற ஐந்து தனிநபர் வீரர்களில் இவரும் ஒருவர். 2016-ல் 86.48 மீட்டர் தூரம் எறிந்து உலக U-20 சாதனை படைத்தார், தடகளத்தில் உலக சாதனை படைத்த முதல் இந்திய தடகள வீரர் ஆனார். 2016-ம் ஆண்டில் 20 வயதிற்குக் குறைவானோருக்கான உலக ஈட்டி எறிதல் போட்டியில் 86.48 மீ தூரம் எறிந்து இளையோருக்கான உலக சாதனையை ஏற்படுத்தினார்.

2018-ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடக்க விழாவில் சோப்ரா இந்தியாவுக்கான கொடி ஏந்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இது அவரது முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டியாகும். 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு விருதான மேஜர் தியான்சந்த் கேல் ரத்னாவிற்கு பரிந்துரைத்த ஒரே தடகள வீரர் நீரஜ் சோப்ரா ஆவார். இவருக்கு 2018-ம் ஆண்டு அர்ஜுனா விருதும், 2022-ல், இந்திய குடியரசின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

அரியானாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா கடந்த 2016ல் புனேயில் உள்ள இந்திய ராணுவத்தின் ‘மிஷன் ஒலிம்பிக்’ பிரிவு சார்பில் தேர்வு செய்யப்பட்டார். பின் இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2018ல் ‘சுபேதாராக’ பதவி உயர்வு பெற்ற நீரஜ் சோப்ரா, பின் சுபேதார் மேஜராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து தேசத்துக்கு பெருமை சேர்த்த அவருக்கு ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. துணை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இந்த நியமனம் ஏப்ரல் 16-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தகவல் தெரிவித்தன.

The post நீரஜ் சோப்ராவுக்கு துணை ராணுவத்தில் கௌரவப் பதவி வழங்கியது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Read Entire Article