விமானத்தை கடத்துவதாக கடிதம்: கோவை ஏர்போர்ட்டில் சோதனை

4 months ago 21


கோவை:கோவையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை இண்டிகோ விமானம், 169 பயணிகளுடன் புறப்பட தயாரானது. அப்போது நடத்திய சோதனையில் ஒரு இருக்கையில் துண்டு சீட்டு ஒன்று கிடந்தது.அதில் ஆங்கிலத்தில். ‘‘நல்ல வேளையாக நான் இந்த விமானத்தை கடைசி நேர முடிவாக கடத்தாமல் விட்டுவிட்டேன்’’ என எழுதப்பட்டிருந்தது. தனது பெயரையும் அதில் எழுதியிருந்தார்.

இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். பின்னர் தீவிர சோதனை நடத்தப்பட்டது. விமானத்தை கடத்த முயன்றதாகவும், பின்னர் திட்டம் கைவிடப்பட்டதாகவும் கடிதம் எழுதியது யார்?, அவர் விமானத்தில் பயணம் செய்தாரா? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதன் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில்தான் அமைச்சர் சக்கரபாணி சென்னைக்கு சென்றார்.

The post விமானத்தை கடத்துவதாக கடிதம்: கோவை ஏர்போர்ட்டில் சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article