திருவட்டார், பிப். 27: திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் அருவிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு பைக்கில் அமர்ந்திருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பைக்கை சோதனை செய்தபோது, ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
வாலிபர்களிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்தபோது, நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த ரூபன்(42), அவரது நண்பர் ராஜாவூர் குமாரபுரத்தை சேர்ந்த ஜோசப் (36) என்பதும் தெரிய வந்தது. 2 பேரும் டைல்ஸ் வேலை பார்த்து வருவதாகவும், கஞ்சாவை இந்த பகுதியில் விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post திருவட்டார் அருகே கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.