மண்டல அளவிலான தடகள போட்டி: அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் வெற்றி

3 hours ago 3

நாகர்கோவில், பிப். 27: தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே இன்டர் பாலிடெக்னிக் அத்லெட்டிக் அசோசியன் சார்பில் நெல்லை மண்டல அளவிலான தடகளபோட்டிகள் நாசரேத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் நாகர்கோவில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் 2ம் ஆண்டு மாணவர் நாகராஜன் 1500 மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் ஆகிய ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் பெற்றார்.

அமைப்பியல் இரண்டாம் ஆண்டு மாணவர் நஜமுதீன் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் 2ம் ஆண்டு மாணவர் தனீஸ் குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கமும், கணினி முதலாமாண்டு மாணவர் எஸ்ரா 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நான்காம் இடமும் பெற்றனர். வெற்றிப்பெற்ற மாணவர்களை முதல்வர் ராஜா ஆறுமுகநயினார், துணை முதல்வர் சில்வியாஹனா, உடற்கல்வி இயக்குநர் முனைவர் சுப்ரதீபன், மற்றும் துறைதலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

The post மண்டல அளவிலான தடகள போட்டி: அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article