கன்னியாகுமரி, பிப்.27: அஞ்சுகிராமம் அருகே 16 வயது சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அஞ்சுகிராமத்தை அடுத்த மயிலாடி பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். பால்குளம் பகுதியை சேர்ந்தவர் மதுரை வீரன் மகன் சுரேஷ் (20). செப்டிக் டேங்க் கிளீனிங் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் சுரேஷ் அந்த சிறுமியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் இருவரும் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளனர். மேலும் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவரை சுரேஷ் திருமணம் செய்துள்ளார்.
பின்னர் தனது வீட்டுக்கு அழைத்து சென்று, அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ெசய்தனர். இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி சுரேஷை கைது செய்து விசாரித்து வருகின்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.
The post அஞ்சுகிராமம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது appeared first on Dinakaran.