
திருவனந்தபுரம்,
கேரள விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் வழக்கம்போல சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாய்லாந்தில் இருந்து 3 பெண் பயணிகள் கேரளாவிற்கு வந்தனர். அதில் ஒருவர் சோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார்.
அப்போது அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 34 கிலோ உயர் ரக கஞ்சா, சாக்லேட்டுகளில் கலந்த 15 கிலோ மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் ரூ. 40 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பெண்களையும் சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.