போர் பதற்றம் தணிந்தது.. ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தொடங்கிய ஹெலிகாப்டர் சேவைகள்

3 hours ago 2

ரியாசி (ஜம்மு-காஷ்மீர்),

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் காரணமாக ஒரு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் சேவைகள் நேற்று (புதன் கிழமை) மீண்டும் தொடங்கப்பட்டன. இதன்படி கத்ராவிலிருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

போர் நிறுத்தத்தை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பொதுமக்களின் வாழ்க்கை முறை இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளது. இதனைத்தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் சில எல்லைப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் இன்று (மே 15ம் தேதி) மீண்டும் திறக்கப்படும் என்று ஜம்மு பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 

மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றத்தை தொடர்ந்து மூடப்பட்ட ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களின் பல பகுதிகளில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.

மீண்டும் பள்ளிகள் திறப்பு என்பது இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும், இந்த எல்லை மண்டலங்களில் உள்ள மாணவர்கள் மேலும் இடையூறுகள் இல்லாமல் தங்கள் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்வதற்கும் ஒரு படியாகும் என்று கூறப்படுகிறது.

இதன்படி பாதுகாப்பு மற்றும் அதிகரித்த போர் பதற்றம் காரணமாக ஐந்து முதல் ஆறு நாட்கள் மூடப்பட்டிருந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.

Read Entire Article