விமான விபத்து; விசாரணை அறிக்கை பல கேள்விகளை எழுப்புகிறது- ஏர் இந்தியா

6 hours ago 3

புதுடெல்லி,

ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் முதல் கட்ட அறிக்கை வெளியகியுள்ளது. இந்த அறிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பி இருப்பதாக ஏர் இந்தியா கூறியுள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா விமான ஊழியர்களுக்கு அதன் தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகமும், நாமும் எதிர்பார்த்தது போலவே முதற்கட்ட விசாரணை அறிக்கை கூடுதல் தகவல்களை பெற்று வருவதாக குறிப்பிட்டு உள்ளது. எதிர்பார்த்தது போலவே இந்த அறிக்கை மூலம் அதிக தெளிவும், ஏராளமான கேள்விகளும் எழும்பி உள்ளன. விபத்துக்குள்ளான விமானம் மற்றும் அதன் என்ஜின்களில் எந்திர கோளாறோ, பராமரிப்பு பிரச்சினைகளோ இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. அத்துடன் கட்டாய பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு இருக்கிறது.

எரிபொருளின் தரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை, புறப்படும் பணிகளிலும் எந்த அசாதாரணமும் இல்லை. விமானிகள் தங்கள் கட்டாய பயணத்துக்கு முந்தைய போதை பரிசோதனையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும் அவர்களின் உடல் நிலை குறித்து எந்த அதிருப்தியும் இல்லை.விபத்து தொடர்பான விரிவான மற்றும் முழுமையான விசாரணைக்காக விசாரணைக்குழுவினருக்கு நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம். கடந்த 30 நாட்களுக்கும் மேலாக ஏராளமான கருத்தாக்கங்கள், குற்றச்சாட்டுகள், புரளிகள் மற்றும் பரபரப்பான தலைப்பு செய்திகள் வெளியாகி இருந்தன. அவை அனைத்தும் ஆதாரமில்லாமல் போய் விட்டது.

அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வருவது புத்திசாலித்தனம் அல்ல. ஒரு இறுதி அறிக்கை அல்லது காரணம் கண்டறியப்படும் வரை இத்தகைய யூகங்களும், அதிக பரபரப்பான தலைப்பு செய்திகளும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.ஏர் இந்தியா தனது பணியில் கவனம் செலுத்தி, நேர்மை, சிறப்பு, வாடிக்கையாளர் கவனம், புதுமை மற்றும் குழுப்பணி ஆகிய மதிப்புகளுக்கு உண்மையாக இருக்கும்" என்றார்.

விசாரணை அறிக்கை

ஆமதாபாத்தில் கடந்த மாதம் நடந்த விமான விபத்து தொடர்பாக இந்திய விமான விபத்து புலனாய்வு அமைப்பு நடத்திய முதற்கட்ட விசாரணை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் விமானம் மேலே எழும்பிய ஒரு சில வினாடிகளுக்குள்ளே அவற்றின் என்ஜின்களுக்கு எரிபொருள் வினியோகம் தடைபட்டதால் அவை செயலிழந்து விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டு இருந்தது.ஆனால் இந்த விசாரணை அறிக்கையை விமானிகள் அமைப்பு நிராகரித்தது. அதைப்போல இந்த அறிக்கை அடிப்படையில் இறுதி முடிவுக்கு வர வேண்டாம் என மத்திய அரசும் கூறியிருந்தது.

Read Entire Article