
சென்னை,
நடிகர் வருண் தவான் மற்றும் ஜான்வி கபூர் நடிக்கும் 'சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் வருண் தவான் சன்னி சன்ஸ்காரியாகவும், ஜான்வி துளசி குமாரியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன், சன்யா மல்ஹோத்ரா, ரோஹித் சரப், மனீஷ் பால் மற்றும் அக்சய் ஓபராய் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஷஷாங்க் கைதன் இயக்கும் இந்தப் படத்தை தர்மா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரைக்கு வருகிறது.
வருண் தவான் 'பார்டர் 2' படத்திலும் நடித்து வருகிறார். மறுபுறம் ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக 'பரம் சுந்தரி' என்ற காதல் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருண் தவான் மற்றும் ஜான்வி கபூர் கடைசியாக 2023-ம் ஆண்டு வெளியான 'பவால்' திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.