
ஸ்ரீநகர்,
இந்தியா- பாகிஸ்தான் மோதல் காரணமாக காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் லடாக் விமான நிலையம் அதிரடியாக மூடப்பட்டது.
இந்தநிலையில் காஷ்மீர் மற்றும் லடாக்கில் சுற்றுலாவுக்காக சென்றவர்களில் பலர் விமானங்கள் மூலமாக திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டனர். உள்நாட்டினர் மட்டுமின்றி வௌிநாடுகளில் இருந்தும் சுற்றுலா வந்த பயணிகள் அங்குள்ள ஓட்டல்களிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
இந்தநிலையில் லடாக்கில் உள்ள ஓட்டல்கள், சுற்றுலாப்பயணிகளுக்கு தாமாக முன்வந்து அடைக்கலம் கொடுத்துள்ளன. அதாவது நிலைமை சீராகி விமானங்கள் இயக்கப்படும் வரை எவ்வித கட்டணமுமின்றி ஓட்டல் அறைகளில் தங்கி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு இலவசமாக உணவு கொடுத்தும் உதவ அங்குள்ள ஓட்டல்கள் முன்வந்துள்ளன.