
நெல்லை மாவட்டம், மானூர், கட்டாரங்குளம், கிழக்கு தெருவை சேர்ந்த ஏசுராஜா (வயது 37) 6.4.2025 அன்று வெளியூர் சென்று இருந்த நிலையில், அவரது தாயாரும் சர்ச்சுக்கு சென்றுள்ளார். பின்பு ஏசுராஜின் தாயார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த இரண்டு செம்மறி ஆடுகள் மற்றும் ஒரு நாய் குட்டியை காணவில்லை. இதுகுறித்து ஏசுராஜா மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் கட்டாரங்குளம், அம்மன் கோயில் வடக்கு தெருவை சேர்ந்த முருகன்(எ) முருகேஷ் (வயது 36) திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், முருகன்(எ) முருகேஷை நேற்று முன்தினம் (7.5.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.