விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒத்துழைப்பு தரவேண்டும்

2 months ago 20

அரியலூர், செப். 30: விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
அரியலூர் மாவட்டம், அக்டோபர் 31 அன்று கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் எரிபொருள் விதிகள் 2008-ன் கீழ் ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் விதி எண்.84-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி இணையதளம் வழியாக மட்டும் அக்டோபர் 24 ற்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யலாம். மேற்படி விண்ணப்பங்களுடன் பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரரின் கடவுச் சீட்டு அளவு (Passport size) புகைப்படம். விண்ணப்பதாரரின் இருப்பிட முகவரிக்கான ஆதாரம் மற்றும் கடை வைக்கப்படும் இடத்தின் முகவரிக்கான ஆதாரம்.

PAN Card மற்றும் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம்
உரிமக் கட்டணம் ரூ.500 ஐ E-Challan மூலம் செலுத்திய செலுத்து சீட்டு அசல். சொந்த கட்டிடம் எனில் பட்டா நகல் மற்றும் வாடகை கட்டிடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம் (பட்டாசுக் கடை நடத்த சம்மதம் என வாடகை பத்திரத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்) மற்றும் குத்தகை நிலம் எனில் குத்தகை ஆவணம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேற்கண்ட இடத்திற்கான சொத்து வரி ரசீது (Property Tax) இணைக்கப்பட வேண்டும்.
சுய உறுதிமொழி பத்திரம். கட்டிட அமைவிட வரைபடம் (Plan Showing proposed area) மற்றும் கட்டிட திட்ட அனுமதி (Building plan approval) (A4 அளவில்). மேற்கண்ட விண்ணப்பங்களை அக்டோபர் 24 ற்குள் மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

உரிமக் கட்டணம் ரூ.500-ஐ கீழ்காணும் IFHRMSஅரசுக் கணக்கு தலைப்பில் இணையதளம் வாயிலாக செலுத்தி அதற்கான அசல் செலுத்து சீட்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். Department Code: 02301, Receipt Type : Temporary Cracker License Sub Type: Temporary Cracker License – Service Charges Account Code : 007060103AA22799 Amount: 500

மேற்படி விண்ணப்பங்கள் ஏற்பட்டதெனில் தற்காலிக உரிம ஆணையையும் நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் இணையதளம் வாயிலாக மனுதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் அனுமதியின்றி மற்றும் உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நேர்வில் தற்காலிக பட்டாசு விற்பனை கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறும் விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையை கொண்டாடிட மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

சனிதோறும் படியுங்கள்
விண்ணப்பங்கள் ஏற்பட்டதெனில் தற்காலிக உரிம ஆணையையும் நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் இணையதளம் வாயிலாக மனுதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அனுமதியின்றி மற்றும் உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

The post விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒத்துழைப்பு தரவேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article