மணப்பாறை வட்டார விவசாயிகளுக்கு கலாஜதா-விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

2 hours ago 3

 

திருச்சி, மே 23: திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டாரம் வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டம் சார்பில் கலாஜதா எனும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி பண்ணப்பட்டி, வடுகபட்டி, சமுத்திரம் மற்றும் வேங்கைகுறிச்சி பகுதிகளில் நடைபெற்றது. வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் அரசின் மானியத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மோகனா இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வேளாண்மை அலுவலர் கண்ணன் வரவேற்புரையாற்றினார். மணப்பாறை தளிர் கலைக்குழுவினர் கரகாட்டம், ஒயிலாட்டம், நகைச்சுவை, பாடல் மற்றும் நாடகம் மூலம் கலைஞாின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டங்கள், நுண்ணீர் பாசனம், உழவன் செயலின் பயன்பாடு, அட்மா திட்டம், பயிர் காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரியின் கவுரவநிதித் திட்டத்தில் ஆதார் எண் இணைப்பு, மாநில வேளாண் வளா்ச்சித் திட்டம் தமிழ்நாடு விவசாய நிலங்களில் பசுமை போர்வைக்கான இயக்கம் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வட்டார தொழில்நுட்ப மேலாளா் கலையரசன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சத்தியசீலன் மற்றும் பிரியங்கா ஆகியோர் செய்திருந்தனர்.

 

The post மணப்பாறை வட்டார விவசாயிகளுக்கு கலாஜதா-விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article