திருச்சி, மே23: திருச்சி, உறையூர் குழுமணி பிரதான சாலை, லிங்கம் நகரில் உள்ள காவேரி பள்ளியின் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக திருச்சிராப்பள்ளி லயன்ஸ் கிளப் ஆப் மெட்ரோபொலிடியன் (2025-2026) தலைவரான அருள் வேதமாணிக்கம், யோகா மாஸ்டர் விஜயகுமார், கல்வி ஆலோசகர் பத்மநாபன், பள்ளியின் தாளாளர் ரவீனா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் மேடையில் அவர்களது பட்டமளிப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து பெற்றோர்களிடம் மாணவர்கள் செயற்கை குறித்து வலியுறுத்தப்பட்டது. விழா குறித்து ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் கூறியதாவது, இது போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களை மத்தியில் புத்துணர்ச்சியும், படிப்பின் மீது ஆர்வத்தையும் ஏற்படுத்தும், சிறு வயதில் இருந்தே குழந்தைகளின் செயல் திறனை அதிகரிக்க மற்றும் மேடை பயம் போக்க இவ்விழாவானது நல்ல தொடக்கமாக இருக்கும் என்றார்.
The post காவேரி நர்சரி, பிரைமரி பள்ளி பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.