விடைத்தாளுடன் ரூ.500 சேர்த்து அனுப்பிய மாணவன்- சமூக வலைத்தளங்களில் வைரல்

4 weeks ago 3

 பெங்களூர்,

அம்மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் கடந்த 4-ந்தேதி வரை நடந்தன. தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சிக்கோடி பகுதியில் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது விடைத்தாள் திருத்திய ஆசிரியர் ஒருவர் மாணவரின் வித்தியாசமான குறிப்பால் அதிர்ச்சியடைந்தார்.

அதில், சார், மேடம் என் காதல் உங்கள் கையில் தான் உள்ளது. நான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றால் தான் என்னை ஏற்றுக்கொள்வதாக என் காதலி தெரிவித்துள்ளார். எனவே இதில் ரூ.500 வைத்துள்ளேன். இதை எடுத்துக்கொண்டு டீ குடியுங்கள். என்னை எப்படியாவது தேர்ச்சி பெற வையுங்கள் என குறிப்பிட்டுள்ளார். இதைப்போல மற்றொரு விடைத்தாளில் ஒரு மாணவர், நீங்கள் என்னை தேர்ச்சி பெற வைத்தால் உங்களுக்கு நான் பணம் தருவேன் என எழுதி இருந்தது. இந்த விடைத்தாள்கள் குறித்த புகைப்படங்கள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Read Entire Article