
ஈரோடு,
தமிழகத்தில் நாளுக்கு நாள் மதுபிரியர்கள் செய்யும் அட்டகாசங்கள் அதிகரித்து வருகிறது. குடிபோதையில் தங்களை மறந்து அவர்கள் பல சாகசங்களை செய்கின்றனர். இந்த காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த வீடியோக்களை அதிக பார்வையாளர்கள் ரசித்து பார்க்கின்றனர். ஒரு சிலர் கண்டனங்களும் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் இதுபோன்ற சம்பவம் ஈரோட்டில் நடந்து உள்ளது. ஈரோடு கனி மார்க்கெட் முன்பு குடிபோதையில் ஒருவர் ரோட்டில் அங்குமிங்கும் தள்ளாடியபடி சுற்றினார். பின்னர் அங்கு சாலையோரம் இருந்த வாகனம் நிறுத்தக்கூடாது (நோ பார்க்கிங்) என்ற அறிவிப்பு பலகையை தூக்கி கொண்டு தள்ளாடியபடி ரோட்டை கடந்து சென்றார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.