
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்திற்குள்பட்ட வெற்றிலைமுருகன்பட்டி, அல்லாளபேரி ஆகிய பகுதியில் ரூ. 9.45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடைகளை மக்களின் பயன்பாட்டிற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்தார். அதேபோல எஸ்.மறைக்குளம் பகுதியில் ரூ.13.16 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையையும் திறந்துவைத்தார்.
இதன்பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற நிறைய பெண்கள் மனு அளித்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் விடுபட்ட மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இன்னும் 3 மாதங்களில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உதவித்தொகை கிடைக்கும்வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கடந்த 29ஆம் தேதி சட்டசபையில் பேசிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.