இந்திய மாணவர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி காஜாமலை பகுதியில் இயங்கி வரும் சட்டக்கல்லூரியில் திருச்சியை மாவட்டத்தைவிட வௌி மாவட்டங்களில் இருந்து வந்து படிப்பவர்கள் அதிகம். எனவே அவர்கள் தங்கி படிப்பதற்கு கல்லூரியை ஒட்டியுள்ள பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து, படிப்பதில் மிகுந்த சிரமத்தை சந்திப்பதால், அரசு சார்பில் சட்ட கல்லூரி மாணவர்கள் தங்கி பயிலுவதற்கான விடுதி ஒன்றை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் கல்லூரிக்கு பயில வரும் மாணவர்களுக்கு பேருந்துகளில் பயணிக்க இலவச பயண அட்டை வழங்கிட வேண்டும். தமிழக அரசு ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது போல் தங்களுக்கும் வழங்கினால், பேருந்து கட்டணம் குறையும். எனவே அரசு சட்ட கல்லூரி மாணவர்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
The post விடுதி வசதி வேண்டும் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.