திருச்சி, மார்ச் 4: திருச்சியில் அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி ரங்கம் போலீசார் கல்லணை சாலையில் கடந்த 2ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேன் ஒன்றை மறித்து சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி 2 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து திருவானைக்காவல் திம்மராய சமுத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
The post திருச்சியில் மணல் கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.