"விடுதலை" படத்துக்கு முன் சினிமா மாணவன், இப்போது மார்க்சிஸ்ட் மாணவன் - வெற்றிமாறன்

1 month ago 10

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்தார். இவரது இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து பவானி ஸ்ரீ,கவுதம் வாசுதேவ் மேனன், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றது.

இந்நிலையில் வெற்றிமாறன் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது வெற்றிமாறனிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. பாலுமகேந்திரா குறித்தான கேள்விக்கு "அவரிடம் நான் வேலை செய்யவில்லை என்றால் சமூகத்துடைய தேடுதல் இருந்திருக்காது. ஆனால் படம் எடுத்திருப்பேன். அவருடன் பயணித்ததால் தான் சமூகத்தில் நடக்கும் அநீதிக்கு எதிராக கோபம் வருகிறது" என்றார்.

விடுதலை படம் குறித்த கேள்விக்கு, "நான் 45 வருஷம் காலேஜில் படித்தது, பாலுமகேந்திரா சார்கிட்ட படித்தது, சமூகத்தில் படித்தது... இது எல்லாத்தையும் விட விடுதலை படம் எடுத்த இந்த 4 வருஷத்தில் நிறைய கத்துக்கிட்டேன். நிறைய வாசித்தேன். அதில் நிறைய தலைவர்களை பத்தி தெரிஞ்சிகிட்டேன். பொதுவாக மேடையில் பேசும் தலைவர்களைத்தான் நமக்கு தெரியும். ஆனால் மக்களோடு நின்று சண்டை போட்டு விடுதலையை வென்று எடுக்கும் தலைவர்களை பற்றி நமக்கு தெரிவதில்லை. அவர்கள் தான் உண்மையான தலைவர்கள். அது போன்ற தலைவர்கள் இங்கே ஆயிரம் பேர் இருக்கிறார்கள். விடுதலை படத்துக்கு முன்பு சினிமா மாணவனாக இருந்த நான் இப்போது மார்க்சிஸிய மாணவனாகவும் இருக்கிறேன். எந்த ஒரு சமூக அமைப்பும் மார்க்சிஸிய கொள்கையின் மேல் கட்டமைக்காமல் இருக்கும் எனில் அது எதோ ஒரு கட்டத்தில் மக்களுக்கு எதிர் நிலையில் போய் நிற்கும். இது என்னுடைய புரிதலும் நம்பிக்கையும். இந்த மேடையில் நிற்பதை மரியாதையாக உணர்கிறேன்" என்றார்.

இயக்குனர் வெற்றிமாறன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

4/5 pic.twitter.com/q5IvKXhFaj

— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 4, 2025
Read Entire Article