
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, தற்போது 'தக் லைப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளநிலையில், சிம்பு அடுத்தடுத்து இன்னும் பெயரிடப்படாத 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
இந்நிலையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிம்பு கலந்துகொடு பேசிய வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அப்போது மாணவர்களுக்கு சில பிட்னஸ் டிப்ஸ்களை சிம்பு கூறினார். அவர் கூறுகையில்,
'இந்த வயதில் என்ன வேணாலும் சாப்பிடலாம். ஜாலியாக இருக்கலாம். இந்த வயதில் எதுவுமே பிரச்சினை இல்லை. அதற்காக விருப்பப்பட்ட அனைத்தையும் சாப்பிட்டு உடம்பை கெடுத்து கொள்ளாதீர்கள். அதன் பிறகு எதிர்காலத்தில் கஷ்டப்படுவீர்கள்.
இரவு அதிகமாக சாப்பிட்டு உடனே தூங்காதீர்கள். அதை மட்டும் தவிர்த்து குறைவாக சாப்பிட்டு கொஞ்சம் பசியோடு தூங்கினால் எல்லாமே சரியாக இருக்கும்' என்றார்.