
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விடாமுயற்சி'. லைகா நிறுவனம் சார்பில் மகிழ்திருமேனி இயக்கிய 'விடாமுயற்சி' படம் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு பல்வேறு தடைகளை தாண்டி இன்று விடாமுயற்சி படம் உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை அஜித் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். முதல் காட்சியாக காலை 5 மணிக்கு கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் திரையிடப்பட்டது.
தமிழ் நாட்டில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இப்படத்தின் வெளியீட்டை டீஜே இசைக் கச்சேரியுடன் ஆட்டம் பாட்டத்துடன், மேள தாளம் முழங்க கொண்டாடி வருகின்றனர். மேலும் அஜித்தின் கட்-அவுட்டிற்கு பாலபிஷேகமும் செய்து வருகின்றனர்.