முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் யு.பி.எஸ்.சி. தலைவராக நியமனம்

1 hour ago 3

புதுடெல்லி,

புதிய யு.பி.எஸ்.சி. தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 29ம் தேதியன்று பிரீத்தி சூடானின் பதவிக்காலம் முடிந்த பிறகு, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் அஜய் குமாரின் நியமனத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுமதி அளித்துள்ளார்.

1985-ம் ஆண்டு ஓய்வு பெற்ற இந்திய நிர்வாக சேவை (IAS) கேரள கேடர் அதிகாரியான அஜய் குமார், ஆகஸ்ட் 23, 2019 முதல், அக்டோபர் 31, 2022 வரை பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார் என்று அவரது சேவை பதிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article