விஜய்யின் "சச்சின்" ரீ-ரிலீஸ் அப்டேட்!

13 hours ago 1

சென்னை,

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான படம் 'சச்சின்'. இந்த படத்தினை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார். இந்த படத்தில் வடிவேலு, சந்தானம், பாலாஜி, ரகுவரன் நடித்து இருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

'சச்சின்' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், படத்தை ரீ-ரிலீஸ் செய்யப்போவதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். கோடை விடுமுறையில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் 'சச்சின்' படத்தில் இடம்பெற்றிருந்த 'கண்மூடி திறக்கும்போது' பாடலின் லிரிக்கல் வீடியோ புதிய வெர்ஷனில் வெளியானது. இப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து நடிகை ஜெனிலியா நெகிழ்ச்சி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் 'சச்சின்' படத்தின் ரீ - ரிலீஸ் தேதி நாளை காலை 10.18 மணிக்கு அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

Release date announcement tomorrow @ 10.18 am pic.twitter.com/cqBrpDk8Xg

— Kalaippuli S Thanu (@theVcreations) March 20, 2025

விஜய்யின் 'கில்லி' திரைப்படம் ரீ-ரிலீஸில் ரூ.20 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article