சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பல்நோக்கு மையம்: உதயநிதி அடிக்கல் நாட்டினார்

9 hours ago 1

சென்னை,

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.

ராயப்பேட்டை பைகி ராப்ட் சாலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.12.37 கோடி மதிப்பீட்டில் 3 தளத்தில் பல்நோக்கு மையம் கட்டப்படுகிறது.

அதே போல் திருவல்லிக்கேணி ஜானிபாட்ஷா தெருவில் ரூ.1.87 கோடி மதிப்பில் முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், பாரதி சாலையில் ரூ.1.37 கோடி செலவில் முதல்வர் படைப்பகம் கட்டும் பணிகளுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Read Entire Article