
மும்பை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 12 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
இதனிடையே தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஐ.பி.எல். நடப்பு சீசனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. இருப்பினும் ரத்து செய்யவில்லை. இதனால் நடப்பு ஐ.பி.எல். தொடர் மீண்டும் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடர் ஒத்திவைக்கப்பட்டது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- "ஒவ்வொரு அடியிலும் தைரியம். ஒவ்வொரு இதயத்துடிப்பிலும் பெருமை. நமது ராணுவ படைகளுக்கு சல்யூட். தேசம்தான் முதன்மை, மற்ற விஷயங்களுக்கு காத்திருக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.