விஜய் தேவரகொண்டாவிற்கு குரல் கொடுக்கும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்

3 months ago 14

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் கடைசியாக 'பேமிலி ஸ்டார்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'விடி12' எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கவுதம் தின்னனுரி இயக்குகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் மார்ச் மாதம் ம் 28ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.

இப்படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாக உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த டீசரில் விஜய் தேவரகொண்டாவிற்கு, தமிழ் மொழியில் நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்த பதிவை படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், விஜய் தேவரகொண்டாவிற்கு தெலுங்கு மொழியில் குரல் கொடுத்துள்ளார். இந்த நிலையில் டப்பிங் பணியின் போது எடுத்த புகைப்படத்தை நடிகர் விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ஜூனியர் என்.டி.ஆர் நன்றி தெரிவித்துள்ளார்.

Spent most of yesterday with him. Chatting about life, times, cinema. Laughing about the same.. Sat through the dub of the teaser, him as excited as me seeing it come to life. Thank you @tarak9999 anna for a most wholesome day and for bringing your madness to our world… pic.twitter.com/f8YpVQcJSt

— Vijay Deverakonda (@TheDeverakonda) February 11, 2025
Read Entire Article