விஜய் தலைமையில் தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா: கொள்கை தலைவர்களின் சிலைகள் இன்று திறப்பு

1 week ago 2

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. இதையொட்டி, தவெக கொள்கை தலைவர்களின் சிலைகளை நடிகர் விஜய் இன்று திறந்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கிய அன்றே தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து தற்போது வரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் தவெகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு அக்.27-ம் தேதி தவெக முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. மாநாட்டில், அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் குறித்து விஜய் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, கட்சியில் நிர்வாகிகள் நியமனம் தீவிரப்படுத்தப்பட்டது.

Read Entire Article