இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே கடந்த 2023 மே 3ம் தேதி ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் 2 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பிரதமர் மோடி, அமித் ஷா மணிப்பூர் சென்று நிலைமையை சீராக்க நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. மணிப்பூரில் நிலைமையை சீராக்க முடியாததால் முதலமைச்சர் பதவியை பைரன் சிங் கடந்த பிப்.9ல் ராஜினாமா செய்தார். மணிப்பூரில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தேர்வு செய்ய முடியாத நிலை உருவானது. மணிப்பூரில் முழுநேர முதல்வர் இல்லாததால் 6 மாதங்களுக்குள் -பேரவையை கூட்ட வேண்டும் என்ற காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில் மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
The post மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.