விஜயதசமிக்கு துப்பாக்கியை வைத்து பூஜை செய்த ஜடேஜாவின் மனைவி

3 months ago 22

காந்திநகர்,

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க.வில் சேர்ந்தார். கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ரிவாபா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

குஜராத் சாட்டமன்ற தேர்தலில் தனது மனைவிக்கு ஆதரவாக ரவீந்திர ஜடேஜா பிரசாரம் செய்தார். சமீபத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரவீந்திர ஜடேஜா, பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில், குஜராத்தில் நடைபெற்ற விஜயதசமி பூஜையில், ரிவாபா ஜடேஜா துப்பாக்கியை வைத்து பூஜை செய்தார். ஜாம்நகரில் விமரிசையாக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ரிவாபா ஜடேஜா, பயபக்தியோடு துப்பாக்கிக்கு மலர் வைத்து பூஜை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

Read Entire Article