
திருப்பூர்,
ரெயில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவதால் 2 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்.18190) வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு போத்தனூர்-கோவை-இருகூர் வழியாக இயக்கப்படும்.
ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ்(13352) வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு கோவை ரெயில் நிலையத்தை தவிர்த்து போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் போத்தனூர் ரெயில் நிலையத்தில் மாற்று நிறுத்தத்தை கொண்டிருக்கும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.