விக்ரமை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன்

5 days ago 4

சென்னை,

2021-ம் ஆண்டில் ஆர்யாவின் நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் துஷாரா விஜயன். அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய துஷாரா, தொடர்ந்து 'கழுவேத்தி மூர்க்கன், அநீதி, வேட்டையன், ராயன்' ஆகிய படங்களில் நடித்தார்,

இவரது நடிப்பில் சமீபத்தில் 'வீர தீர சூரன் 2' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எஸ்.யு. அருண்குமார் இயக்கிய இப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். மதுரையை மையமாக கொண்டு கேங்ஸ்டர் கதையில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் நடிகை துஷாரா விஜயன் நடிகர் விக்ரமை தொடர்ந்து பிரபல நடிகரான விஷாலுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துஷாரா விஜயன் - விஷால் கூட்டணியில் உருவாக உள்ள படத்தை 'ஈட்டி' பட இயக்குனர் ரவி அரசு இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தினை விஷால் தயாரிக்க உள்ளதாகவும், வருகிற ஏப்ரல் மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Read Entire Article