விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

1 week ago 5

சென்னை: விகடன் இணையதளத்தில் பிரதமர் மோடி காட்டூன் இடம்பெற்றதை தொடர்ந்து இணையதளம் முடக்கபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ந்திருந்தது. இதனை அடுத்து, விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ள்ளார்.

இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் @vikatan-னின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு…

— M.K.Stalin (@mkstalin) February 16, 2025

இது தொடர்பாக முதல்வரின் சமுக வலைதள பதிவில்:
இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடன்-னின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

The post விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article