நீடாமங்கலம், ேம 19: வெண்ணாறு பாலம் அருகே பல்லாங்குழி சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாறு உள்ளது.இந்த ஆற்றின் குறுக்கே பழைய நீடாமங்கலம் வெண்ணாறு பாலத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் 200 அடி தூரத்தில் சாலை மிகவும் மோசமாக முக்கால் அடி ஆலத்தில் பல்லாங்குழி போன்ற குழிகள் உள்ளது.
இந்த சாலையில் சைக்கிள் மற்றும் மோட்டார் பைக்குகளில் செல்பவர்வர் இரவு நேரங்களில் கீழே விழுந்து ரெத்த காயங்களுடன் செல்கின்றனர்.சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆபத்தான நிலையில் உள்ள பல்லாங்குழி சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வெண்ணாறு பாலம் அருகே சாலை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.