மன்னார்குடி, மே 19: தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க திருவாரூர் மாவட்ட நிர்வாகி களுக்கான செயல்விளக்க சிறப்புக் கூட்டம் தஞ்சை மண்டல துணைத் தலைவர் கோபால் ராமய்யர் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மாரிமுத்து மகேசன், மாவட்ட செயலாளர் தாஜீதீன், மண்டல துணைச் செயலாளர் கருணாகரன், மாவட்ட மகளிர் ஒருங்கினணப்பாளர் கவிதா லெனின் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். கொள்கை விளக்க செயலாளர் உமா மகாதேவன் வரவேற்றார்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க மாநில தலைவர் ராசபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில், மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவித்துள்ள நிலையில் கடைமடை வரை பாசன நீர் தட்டுபாடின்றி செல்வதை அரசு உறுதிபடுத்த வேண்டும். நடப்பு நிதியா ண்டில் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரிய நீர்நிலைகளின் தனித்தனி விவரங்கள், அவற்றிற்கு செலவிடப்பட்ட நிதி அளவு குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து விதமான உணவு பொருட்களை யும் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். வேளாண்மை தனி நிதி நிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு கூறப்பட்ட சலுகைகளையும், திட்டங்களையும் பாரபட்சமின்றி செயல்படுத்த வேண்டும்.
பதிவு செய்துள்ள அணைத்து தரப்பு விவசாயிகளுக்கும் இலவச மும்முனை மின்சார இணைப்பு வழங்க வேண் டும். மகளிர் மேம்பாட்டுக்கென ஒன்றிய, மாநில அரசுகளால் வழங்கப்படுகிற கடன் நிதி பயனாளிகளுக்கு உரிய முறையில் செல்வதை உறுதிப் படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் காட்டுப் பன்றி களை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முடிவில், ஒன்றிய துணை அமைப்பாளர் கார்த்திகே யன் நன்றி கூறினார்.
The post மேட்டூர் அணையிலிருந்து கடைமடைக்கு தட்டுபாடின்றி பாசன நீர் செல்ல வேண்டும் appeared first on Dinakaran.