திருத்துறைப்பூண்டி, மே 19: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர்கோயிலுடன் இணைந்த சீதா லட்சுமண அனுமன் ராமர் கோயில் உள்ளது. பழமை வாய்ந்தத இந்த கோயிலின் பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து அபிஷேக ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் தொடர்ந்து சீதா ராமர் கல்யாண உற்சவ வீதியுலா நடைபெற்றது. முன்னதாக பொய்சொல்லா பிள்ளையார் கோவிலிருந்து பெண்கள் சீதா ராமர் கல்யாணத்திற்கு சீர்வரிசை எடுத்து வந்தனர், இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post திருத்துறைப்பூண்டி ராமர் கோயில் சீதா ராமர் கல்யாண உற்சவ வீதியுலா appeared first on Dinakaran.